திருவெண்ணெய்நல்லூர் தீபாஞ்சம்மன் கோவில் சாகை வார்த்தல் திருவிழா
ADDED :14 hours ago
திருவெண்ணெய்நல்லூர்: திருவெண்ணெய்நல்லூர் தீபாஞ்சம்மன் கோவிலில் சாகை வார்த்தல் திருவிழா நடந்தது.
திருவெண்ணெய்நல்லூரில் உள்ள பிரசித்தி பெற்ற தீபாஞ்சம்மன் கோவிலில் இன்று சாகை வார்த்தல் திருவிழா நடந்தது. விழாவையொட்டி இன்று காலை 7:00 மணிக்கு அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகளும் 10:00 மணியளவில் கரகம் புறப்படுதலும், பகல் 1.30 மணி அளவில் சாகை வார்த்தல் நிகழ்ச்சியும் நடந்தது. விழாவில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதனை தொடர்ந்து இரவு அம்மன் வீதியுலா நடந்தது. விழா ஏற்பாடுகளை பகுதி மக்கள் செய்திருந்தனர்.