பத்ரகாளியம்மன் கோவில் குண்டம் திருவிழா
ஈரோடு: ஈரோட்டில் நடந்த ஸ்ரீபத்ரகாளியம்மன் கோவில் குண்டம் திருவிழாவில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு, ஸ்வாமி தரிசனம் செய்தனர்.
ஈரோடு, கோட்டை சின்னபாவடியில் ஸ்ரீபத்ரகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது.சென்ற, 28ம் தேதி பூச்சாட்டுதலுடன், குண்டம் திருவிழா துவங்கியது.
29ம் தேதி பக்தர்கள் காவிரி ஆற்றில் தீர்த்தம் எடுத்து வந்து, அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். 30ம் தேதி கோட்டை பத்ரகாளியம்மன் அக்னி ஏந்தி அம்மன் ஊர்வலம் வந்தனர்.பக்தர்கள் இரவு விரதம் இருந்து, ஜன, 31 பூக்குழி மிதித்திட, பொங்கல், மாவிளக்குடன் வழிபாடு நடந்தது.பிப்.1 குண்டம் இறங்க, ஈரோடு மற்றும் சுற்று வட்டார பகுதியில் இருந்து பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.காலை, 8.30 மணியளவில் பக்தர்கள் வரிசையின் நின்று அம்மன் கோஷத்துடன் குண்டம் இறங்கினர்.அதைதொடர்ந்து, கோட்டை அம்மன் நண்பர்கள் சார்பில், ஈரோடு செங்குந்தர் மற்றும் ஒட்டக்கூத்தர் திருமண மண்டபங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை, அம்மன் ஊர்வலத்தில், பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமியை தரிசனம் செய்தனர்.