கதிர் நரசிங்க பெருமாள் கோயிலில் மழை வேண்டி சிறப்பு வழிபாடு
ADDED :6 hours ago
கோபால்பட்டி: கோபால்பட்டி அருகே வி.மேட்டுப்பட்டி கதிர் நரசிங்க பெருமாள் கோயிலில் மழை பொழிந்து வறட்சி நீங்க வேண்டி ஆண்டாள் பாசுரம், திருப்பாவை பாடி பக்தர்கள் வழிபட்டனர். முன்னதாக கதிர் நரசிங்க பெருமாளுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது. கோயில் கொடி மரத்திற்கு பூக்கள் சமர்பித்து 27 முறை சுற்றி வந்தனர். பின்னர் கோயில் எதிரே உள்ள குளத்தில் குழுவாக ஆண்டாள் பாசுரம், திருப்பாவை பாடி சிறப்பு வழிபாடு நடத்தினர். கோயில் அறங்காவலர் ராஜசிம்மன், நிர்வாகிகள், மேட்டுப்பட்டி சுற்றியுள்ள கிராம மக்கள் பலர் பங்கேற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது.