உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பதியில் பவித்ரோத்ஸவம் துவங்கியது; பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம்

திருப்பதியில் பவித்ரோத்ஸவம் துவங்கியது; பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம்


திருப்பதி; திருமலையில் நடந்து வரும் பவித்ரோத்ஸவம் விழா நேற்று சிறப்பாக துவங்கியது.


பவித்ரோத்ஸவம் என்பது புனிதப் படுத்துதல் என்ற பொருளில் வரும் பெருமாளையே பவித்ரன் என அழைப்பார்கள். பூஜை செய்யும்போதும் சில சமயங்களில் தவறுகள் நடைபெறலாம் மந்திர உச்சரிப்புக்களிலும் தவறுகள் நேரிடலாம். இவைகளினால் ஏற்படும் தோஷங்களை நீக்கிப் பரிசுத்தம் அடையும் வண்ணம் செய்யப்படுவதே பவித்ரோத்ஸவம் ஆகும். இவ்விழாவானது திருமலையில் நேற்று சிறப்பாக துவங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் இரண்டாம் நாளில் இன்று காலை யாகசாலையில் ஹோமம் மற்றும் வேள்வி நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதன்பின் சம்பங்கி பிரகாரத்தில் ஸ்னபன திருமஞ்சனம் நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !