உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உள்ளாவூரம்மன் கோவிலில் தீமிதி விழா கோலாகலம்

உள்ளாவூரம்மன் கோவிலில் தீமிதி விழா கோலாகலம்

 வாலாஜாபாத்: உள்ளாவூர், உள்ளாவூரம்மன் கோவிலில், தீமிதி திருவிழா கோலாகலமாக நடந்தது.


வாலாஜாபாத் ஒன்றியம், உள்ளாவூர் உள்ளாவூரம்மன் கோவிலில் இந்தாண்டிற்கான தீமிதி திருவிழா, நேற்று முன்தினம் நடந்தது. அப்பகுதி பெண்கள், ஊரணி பொங்கலிட்டு அம்மனுக்கு படையிலிட்டனர். தொடர்ந்து குடம் அலங்காரத்தில் அம்மன் வீதியுலா நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பக்தர்கள் அலகு குத்தியும், ஆகாயத்தில் தொங்கியும் அம்மனை வழிபட்டனர். அதை தொடர்ந்து, இரவு 7:00 மணிக்கு காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேற கோவில் வளாகத்தில் மூட்டப்பட்டிருந்த தீ குண்டத்தில் இறங்கி, அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !