ஓரிக்கை மணிமண்டபத்தில் வழக்கறிஞர்கள் கருத்தரங்கம்: சங்கராச்சாரியார் அருளாசி
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தை அடுத்த ஓரிக்கை மணிமண்ட பத்தில் வழக்கறிஞர்களுக்கான சிறப்பு கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. இக்கருத்தரங்கை காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அருளாசி வழங்கி தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் ஊட்டி தொகுதி பா.ஜ., – எம்.எல்.ஏ., போஜராஜன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசியதாவது:
நம் கலாசாரம் மற்றும் ஆன்மிகப் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் வழக்கறிஞர்களின் பணி மிக முக்கியமானது. குறிப்பாக, கோவில்கள் சார்ந்த நிர்வாகச் சிக்கல்கள், கோவில் சொத்துக்களைப் பாதுகாத்தல் மற்றும் வழிபாட்டு உரிமைகள் தொடர்பாகத் எழும் சட்டப் போராட்டங்களில் வழக்கறிஞர்கள் தங்களின் திறமையான சட்டப் பங்களிப்பை வழங்க வேண்டும்.அறநிலையச் சட்டங்கள் குறித்த தெளிவான புரிதலுடன், பாரம்பரியத்தைப் பேணிக் காக்க சட்டரீதியான தீர்வுகளை முன்வைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இந்த கருத்தரங்கில் புதுடில்லி, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து 50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.