காரைக்காலில் சித்தானந்த சுவாமியின் மகாகுருபூஜா நடந்தது
காரைக்கால்; காரைக்கால் அக்கரைவட்டம் சித்தானந்த சுவாமியின் மகாகுரு பூஜைவில் ஏராளமாக பக்தர்கள் கலந்து கொண்டனர்.
காரைக்கால் அக்கரைவட்டம் கிராமத்தில் சித்தானந்த சுவாமிகள் கோவில் உள்ளது. இங்கு மகாகுருபூஜை விழா நேற்று நடந்தது. முன்னதாக நேற்று முன்தினம் காலை கணபதி ஹோமம் நடந்தது. நேற்று காலை 10 மணிக்கு திருமலைராயன் ஆற்றிலிருந்து பால் குடம் ஊர்வலம் நடந்தது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பால்குடங்களை ஊர்வலமாக கொண்டுவந்து அபிஷேகம் நடந்தது.பின் காலை 11மணிக்கு அசுவத்பூஜை, கோபூஜை, கஜபூஜைகள் நடந்தது. அதைத்தொடர்ந்து 12 மணிக்கு குருபூஜை நடந்தது. இந்நிகழ்ச்சியில் தொகுதி எம்.எல்.ஏ., மீனாட்சிசுந்தரம் உள்ளிட்ட விழாக்குழுவினார்கள் பலர் கலந்துகொண்டனர்.பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு சித்தானந்த சுவாமிகளின் வீதி உலா நடந்தது.விழாவிற்கான ஏற்பாடுகளை திருமுறை மன்றத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர்.இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு சித்தானந்த சுவாமியை வழிப்பட்டனர்.