உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விழுப்புரம் வைகுண்டவாச பெருமாள் கோவிலில் திருமஞ்சனம்

விழுப்புரம் வைகுண்டவாச பெருமாள் கோவிலில் திருமஞ்சனம்

விழுப்புரம் ஜனகவல்லி தாயார் சமேத வைகுண்டவாச பெருமாள் கோவிலில் சம்வத்சரோத்ஸவ கும்பாபிஷேக தினத்தை முன்னிட்டு  ஜனகவல்லி தாயார் பெருமாள் உற்சவருக்கு திருமஞ்சனம் நிகழ்ச்சி நடந்தது.


விழுப்புரம் ஜனகவல்லி தாயார் சமேத வைகுண்டவாச பெருமாள் கோவிலில் இன்று சம்வத்சரோத்ஸவ கும்பாபிஷேக தினத்தை முன்னிட்டு காலை 8:00 மணிக்கு, லட்சுமி நாராயண சுக்த ேஹாமம் நடந்தது. இதனைத் தொடர்ந்து, வைகுண்டவாச பெருமாள், ஜனகவல்லி தாயார் திருமஞ்சனம், பகல் 12:00 மணிக்கு சகஸ்ரநாம அர்ச்சனை, தீபாராதனை நடந்தது. ஏற்பாடுகளை, ஆலய நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி மக்கள் செய்திருந்தனர்.




தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !