மதுக்கரை தர்ம லிங்கேஸ்வரர் கோவிலில் பவுர்ணமி சிறப்பு அபிஷேகம்
ADDED :2 minutes ago
கோவை; ஆவணி மாதம் பௌர்ணமி திதியை முன்னிட்டு கோவை மதுக்கரை மலை மேல் அமர்ந்திருக்கும் தர்ம லிங்கேஸ்வரர் கோவிலில் மூலவர் மற்றும் உற்சவருக்கு அபிஷேகம் பூஜை நடந்தது இதில் மூலவர் தீப ஒளியில் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். உற்சவர் உமாமகேஸ்வரர் ரிஷப வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, கிரிவலம் வந்து மூலவர் மற்றும் உற்சவரை வழிபட்டனர். நிறைவாக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.