உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கடவுளை சரணடைந்தால் இன்பம் பெருகும்: ஆதிசங்கரர்

கடவுளை சரணடைந்தால் இன்பம் பெருகும்: ஆதிசங்கரர்

* இன்பத்தை கொடுப்பது கடவுளின் திருவடி மட்டுமே. அவரைச் சரணடைந்திடு.
* ஒளியின்றி எதையும் பார்க்க முடியாது. அது போல ஆராய்ச்சியின்றி ஞானம் தோன்றாது.
* நெருப்பில்லாமல் சமையல் இல்லை; ஞானம் இல்லாமல் மோட்சம் இல்லை.
* வறுமையும், சொத்தும் விருந்தினர் போல தற்காலிகமானது.
* தீய ஆசைகளை ஒழிக்க நல்லவர்களிடம் நட்பு கொள்.
* உழைப்பால் கிடைத்த பணமே மதிப்பு மிக்கது.
* நேரம், இடம் என எதுவும் தியானத்திற்கு தடையாக இருக்கக் கூடாது.
* ஐம்புலன்களை கட்டுப்படுத்தினால் மனமும் கட்டுப்படும்.
* தர்மத்தின் மூலம் மனதை துாய்மைப்படுத்தலாம்.
* ‘நான்’, ’எனது’ என்ற எண்ணமே துன்பத்திற்கு காரணம்.
* கிடைத்ததைக் கொண்டு சந்தோஷமாக வாழ்ந்திடு.
* பயனில்லாத ஒரு வார்த்தை கூட பேசாதே.
* வாய்ப்பு கிடைத்தும் நல்லதை பேசாதவன் பேசத் தகுதியற்றவன்.
* யோகி போல தனித்து நின்று வாழப் பழகு.
* கடவுளிடம் உன் மனதை முழுமையாக கொடு. அதுவே சிறந்த செயல்.
* சுயநலத்தை மறந்தால் கடவுளை எளிதாக அடையலாம்.
* ‘மூச்சுள்ள வரை உன்னை நினைக்க வேண்டும்’ என கடவுளிடம் வேண்டு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !