உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சல்லித்தோப்பு முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

சல்லித்தோப்பு முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

திருப்புல்லாணி: திருப்புல்லாணி அருகே களிமண்குண்டு ஊராட்சிக்குட்பட்ட சல்லித்தோப்பு கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் இன்று கும்பாபிஷேகம் நடந்தது. நேற்று முன்தினம் முதல் கால யாகசாலை பூஜையுடன் விழா துவங்கியது. ரக்சாபந்தனன், கும்ப அலங்கார பூஜைகளுக்கு பின்னர் நேற்று காலை 7:00 மணிக்கு விநாயகர் பூஜை, கோமாதா பூஜை உள்ளிட்டவைகள் நடந்தது. இரண்டாம் கால யாகசாலை பூஜைக்கு பிறகு கடம் புறப்பாடு நடந்தது? மூலவர் முத்துமாரியம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் கோபுர விமான கலசத்தில் சிவாச்சாரியார் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தார். மூலவருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை சல்லித்தோப்பு கிராம பொதுமக்கள், விழாக்குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !