பழமையான குகை கோவிலில் நாகலிங்கேஸ்வரருக்கு ருத்ராபிஷேகம்
ADDED :1 days ago
ஆர்.கே.பேட்டை: பள்ளிப்பட்டு அடுத்த முடிபள்ளி மலைக்கோவிலில், பழமையான குகை கோவில் உள்ளது.
இந்த குகை கோவிலில் அருள்பாலிக்கும் அன்ன பூரணி சமேத நாகலிங்கேஸ்வரருக்கு, ஆவணி மாதம் பவுர்ணமியை ஒட்டி, நேற்று முன்தினம் நள்ளிரவு, சிறப்பு ருத்ராபிஷேகம் நடத்தப்பட் டது. அதை தொடர்ந்து நடந்த யாகத்தில், நுாற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். இதே போல், ஆர்.கே. பேட்டை அடுத்த ராச பாளையம் பாலகுருநாதீஸ் வரர் கோவிலிலும், ருத்ராபிஷேகம் நடத்தப்பட்டது. இதற்கான யாகபூஜைக்கு, பகுதி மக்கள், புனிதநீர் கலசத்தை ஊர்வலமாக கொண்டு வந்தனர். இந்த தலத்தில், பழமையான ஆலமரமே கோவிலாக அமைந்துள்ளது சிறப்பு.