உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விழுப்புரம் பெருமாள் கோவிலில் சிறப்பு உபன்யாசம்

விழுப்புரம் பெருமாள் கோவிலில் சிறப்பு உபன்யாசம்

 விழுப்புரம்: விழுப்புரம் பெருமாள் கோவிலில், வேளுக்குடி ரங்கநாதன் சிறப்பு உபன்யாசம் நடந்தது.


விழுப்புரம் ஜனகவல்லி தாயார் சமேத வைகுண்டவாச பெருமாள் கோவிலில் கிருஷ்ண லீலைகளின் ரகசியம் அறிவோம் தலைப்பில் 3 நாட்கள் ஆன்மிக சொற்பொழிவு நேற்று துவங்கியது. நிகழ்ச்சியில், வேளுக்குடி ரங்கநாதன், ‘அவதாரம் என்றால் மேல் இருந்து கீழ் இறங்குவது. கடவுள் கருணையால் பிறந்து அவதாரம் எடுக்கிறார். அதனால் கடவுளின் நிறம் கருப்பு. கிருஷ்ணர் 7 வயதில் கம்சனை அழித்தார். 11 வயதில் கோவர்த்தன கிரி மலையை துாக்கினார். கிருஷ்ணர் எதுகுலத்தில் பிறந்தவர். நாம் மனிதர்கள். கர்மாவால் பிறக்கிறோம். மனிதர்களின் தன்மைகள் மற்றும் பழக்க, வழக்கங்களை நல்ல சிந்தனைகளாக மாற்றிக்கொள்ள வேண்டும். நல்ல மனிதர்களாக உருவாக வேண்டும்’ என சொற்பொழிவாற்றினார். சொற்பொழிவானது இன்று மற்றும் நாளை மாலை 6:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !