உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாலக்காடு சங்கரி சாரதம் கோவிலில் ஸ்ரீமத் பாகவத சப்தாஹ யக்ஞம் கோலாகலத் தொடக்கம்

பாலக்காடு சங்கரி சாரதம் கோவிலில் ஸ்ரீமத் பாகவத சப்தாஹ யக்ஞம் கோலாகலத் தொடக்கம்

பாலக்காடு; கேரள மாநிலம் பாலக்காடு ஸ்ரீ சங்கரி சாரதம் கோவிலில் ​ஜன்மாஷ்டமி மஹோத்ஸவத்தை முன்னிட்டு, ஸ்ரீமத் பாகவத சப்தாஹ யக்ஞம் விமரிசையாகத் தொடங்கியது. இத்திருக்கோயில் வரலாற்றில் பாகவத சப்தாஹம் நடத்தப்படுவது இதுவே முதல் முறையாகும். ​சிருங்கேரி ஜகத்குரு சங்கராச்சாரியார் ஸ்ரீ ஸ்ரீ விதுசேகர பாரதி சுவாமிகளின் அருளாசியுடன் நடைபெறும் இந்த யக்ஞத்திற்கு, பிரம்மஸ்ரீ ஸ்ரீகாந்த் சர்மா ஆச்சார்யராகப் பொறுப்பேற்று வழிநடத்துகிறார். தினமும் காலை 6:15 மணி முதல் மதியம் 1:30 மணி வரை நடைபெறும் இந்த சப்தாஹ யக்ஞம், ஜன்மாஷ்டமி திருநாளன்று மகா பூர்ணாஹுதியுடன் நிறைவு பெறுகிறது. ​முன்னதாக நடைபெற்ற தொடக்க விழா நிகழ்ச்சிக்கு கோவில் நிர்வாக குழு தலைவர் கரிம்புழை ராமன் தலைமை தாங்கினார். யக்ஞ அமைப்புக் குழுத் தலைவர் வாசுதேவன், மாநில பிராமண சபை மாநிலச் செயலாளர் சிவராமகிருஷ்ணன், அமைப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் வைத்தியநாதன், கிருஷ்ணன் மற்றும் நடராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர். சிருங்கேரி பாடசாலை மாணவர்களின் பக்திப் பரவசமூட்டும் வேத கோஷங்களுடன் யக்ஞத் தொடக்க நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !