காஞ்சிபுரம் ஆதிபராசக்தி மன்றம் சார்பில் அம்மனுக்கு பால் அபிஷேகம்
ADDED :6 days ago
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில், இயற்கை சீற்றங்களில் இருந்து மக்கள் விடுபடவும், மழை வேண்டியும், உலக மக்கள் நலன் கருதியும் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றங்கள் சார்பில் பால்குட ஊர்வலம் நேற்று நடைபெற்றது. காஞ்சிபுரம் திருக்கச்சி நம்பி தெருவில் இருந்து புறப்பட்ட பால்குட ஊர்வலம், பெரிய காஞ்சிபுரம் தாமல்வார் தெருவில் உள்ள ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தைச் சென்றடைந்தது. அங்கு, பக்தர்கள் அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து சிறப்பு வழிபாடு செய்தனர். இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் த.வெ.க., – எம்.எல்.ஏ.வும், வனத்துறை அமைச்சருமான ரஞ்சித்குமார், ஆதிபராசக்தி மன்ற மாவட்டத் தலைவர் தேவேந்திரன், காஞ்சிபுரம் பா.ம.க., – முன்னாள் எம்.எல்.ஏ., சக்தி கமலம்மாள் உட்பட பலர் பங்கேற்றனர்.