உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சிபுரம் வரதர் கோவிலில் புதிய மரத்தேர் பணி தொடக்கம்

காஞ்சிபுரம் வரதர் கோவிலில் புதிய மரத்தேர் பணி தொடக்கம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு 4.25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய மரத்தேர் செய்வதற்காக, ரங்கசாமி குளம் பகுதியில் ‘ஷெட்’ அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.


காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 200 ஆண்டுகள் பழமையான மரத்தேருக்கு பதிலாக, புதிதாக 63 அடி உயரத்தில் பிரமாண்ட மரத்தேர் செய்யப்பட உள்ளது. இதற்கான ஆரம்ப கட்ட பணிகளின் ஒரு பகுதியாக, காஞ்சிபுரம் ரங்கசாமி குளம் பகுதியில் அமைந்துள்ள கோவிலுக்குச் சொந்தமான இடம் தற்போது துாய்மைப்படுத்தப்பட்டு, சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுகுறித்து கோவில் செயல் அலுவலர் சீனிவாசன் கூறியதாவது: கோவிலுக்குச் சொந்தமான இடத்தில் பாதுகாப்புடன்கூடிய, ‘ஷெட்’ அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அருகில் உள்ள மின்சார வாரியத்தின் டிரான்ஸ்பார்மரை அங்கிருந்து மாற்றித் தருமாறு மின்சார வாரியத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளோம். அதைத் தொடர்ந்து, மரத்தேர் செதுக்கும் திருப்பணிகள் மிக விரைவில் முழுவீச்சில் தொடங்கும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !