ஸ்ரீபச்சைவாழியம்மன் கோவிலில், கும்பாபிஷேக ஆண்டு விழா
ADDED :2 days ago
நடுவீரப்பட்டு; பண்ருட்டி அடுத்த எழுமேடு மன்னார்சுவாமி, ஸ்ரீபச்சைவாழியம்மன் கோவிலில், 11ம் ஆண்டு கும்பாபிேஷக ஆண்டு விழா நேற்று நடந்தது. விழாவை முன்னிட்டு நேற்று காலை பூஜைகள் துவங்கியது. தொடர்ந்து விநாயகர், முருகர், பச்சைவாழியம்மன். மன்னார்சுவாமி உள்ளிட்ட அனைத்து சுவாமிகளுக்கும் சிறப்பு அபிேஷக ஆராதனைகள் நடந்தன. பகல் 12:00 மணிக்கு மகா பூர்ணாஹீதி நடந்து, யாகத்தில் வைக்கப்பட்ட கலசங்கள் ஆலய உலாவாக வந்து சுவாமிக்கு சிறப்பு கலச அபிேஷகள் நடந்தது. மகா மகா தீபாராதனை நடந்தது. ஏற்பாடுகளை ஆலய நிர்வாக அறங்காவலர் இதயரசு எத்திராஜலு தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.