முத்துமாரியம்மன் கோயில் பூக்குழி விழா
ADDED :3 days ago
திருவாடானை: திருவாடானை மேலரதவீதி முத்துமாரியம்மன் கோயில் திருவிழா ஆக.25ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்வாக பூக்குழி இறங்கும் விழா நேற்று காலை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பால்குடம், பறவைக்காவடி எடுத்து பூக்குழி இறங்கினர். இரவில் வண்ண மின் அலங்காரத்தில் சுவாமி ஊர்வலம், பூ தட்டு ஊர்வலம் நடந்தது.