உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புதுச்சத்திரம் ரயிலடி பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

புதுச்சத்திரம் ரயிலடி பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

புதுச்சத்திரம்: புதுச்சத்திரம் ரயிலடி பாலமுருகன் கோவிலில், கார்த்திகையை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.


புதுச்சத்திரம் ரயிலடி பாலமுருகன் கோவிலில், மாதந்தோறும் கார்த்திகையை முன்னிட்டு, சிறப்பு அபிஷேக ஆராதனை நடப்பது வழக்கம். ஆவணி மாத கார்த்திகையை முன்னிட்டு, நேற்று சிறப்பு  அபிஷேக ஆராதனை நடந்தது. அதையொட்டி காலை 11.00 மணிக்கு, பாலமுருகனுக்கு பால், தயிர், விபூதி, சந்தனம், பஞ்சாமிர்தம், தேன் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. மதியம் 1.00 மணிக்கு, பாலமுருகன் சிறப்பு அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்டு, தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !