ரங்கநாதபுரம் ஸ்ரீ ரேணுகா தேவி கோவிலில், 108 திருவிளக்கு பூஜை
சூலூர்: ரங்கநாதபுரம் ஸ்ரீ ரேணுகா தேவி கோவிலில், திருவிளக்கு பூஜை நடந்தது.
கண்ணம்பாளையம் பேரூராட்சி ரங்கநாதபுரத்தில் உள்ள ஸ்ரீ ரேணுகா தேவி கோவில் பழமையானது. இங்கு, திருக்கல்யாண வைபவம் நடந்தது. கணபதி ஹோமத்துடன் துவங்கிய விழாவில், சக்தி அழைத்தல், ஜலக்கம் ஆடுதல் நடந்தது. நேற்று முன்தினம் காலை கோ பூஜை நடந்தது.
தொடர்ந்து மூலவருக்கு திருமஞ்சனம் நடந்தது. ஸ்ரீ ரேணுகா தேவி, ஸ்ரீ ஜமதக்கனி திருமண வைபவம் நடந்தது. பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் தேவி அருள்பாலித்தார்.
பின்னர், ஸ்ரீ ரேணுகா தேவி வரலாற்று கதை படிக்கப்பட்டது. ரங்கநாதபுரம் ஸ்ரீ ரேணுகா தேவி கிருஷ்ண லீலா பஜனை குழுவினரின் நாம சங்கீர்த்தனம் நடந்தது. இதைத்தொடர்ந்து, பொதுப் பொங்கல் வைக்கப்பட்டு, தேவிக்கு சிறப்பு பூஜை நடந்தது. மாலை,5:30 மணிக்கு, 108 திருவிளக்கு பூஜை நடந்தது. சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, தேவியை வழிபட்டனர்.