உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆவணி தேய்பிறை பிரதோஷ வழிபாடு

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆவணி தேய்பிறை பிரதோஷ வழிபாடு

திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆவணி மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி, ராஜகோபுரம் அருகே உள்ள பெரிய நந்திய பகவானுக்கு  பல்வேறு சிறப்பு அபிஷேகம் நடந்தது.


திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடந்த ஆவணி தேய்பிறை பிரதோஷ வழிபாட்டில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், இன்று ஆடி தேய்பிறை பிரதோஷ வழிபாடு நடந்தது. சுவாமி சன்னதியில் உள்ள அதிகார நந்தி, கிளி கோபுரம் எதிரில் உள்ள நந்தியம்பெருமான், ஆயிரங்கால் மண்டப வளாகத்தில் உள்ள பெரிய நந்தி பகவானுக்கு பால், தயிர், சந்தனம் மற்றும் பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. நடந்த சிறப்பு பூஜையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, அரோகரா கோஷம் எழுப்பி வழிபட்டனர். சர்வ அலங்காரத்தில் காட்சியளித்த சுவாமியை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை நிர்வாகத்தினர் செய்திருந்தனர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !