திருப்பூர் சுடலை மகாராஜா கோவில் பொங்கல் விழா
அனுப்பர்பாளையம்: திருப்பூர் பி.என்.ரோடு, அண்ணா நகர் மேற்கு தியாகி குமரன் காலனி சுடலை மகாராஜா திருக்கோவில் வளாகத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ கரை சுடலைமாடசாமி, ஶ்ரீ முண்ட சுவாமி, ஶ்ரீ ராஜகாளி அம்மன், ஶ்ரீ பத்திரகாளி அம்மன், ஶ்ரீ முத்தாரம்மன், ஶ்ரீ பேச்சியம்மன், ஶ்ரீ பிரம்மசக்தி ஆகிய கோவிலின் 20 ம் ஆண்டு பொங்கல் விழா கடந்த ஐந்தாம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி, நேற்று 9 ம் தேதி காலை நூற்றுக்கு மேற்பட்ட பக்தர்கள் மா விளக்கு எடுத்து, ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர். தொடர்ந்து, அங்கு பொங்கலிட்டு சுவாமியை வழிபட்டனர். சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். மதியம் உச்சி கால பூஜை, இரவு கம்பம் கங்கையில் சேர்த்தல் உள்ளிட்டவை நடப்பெற்றது. இன்று 10 ம் தேதி மதியம் அம்மன் திருவீதி உலா வருதல், தொடர்ந்து, மஞ்சள் நீராடுதலுடன் விழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் செய்து இருந்தனர்.