மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்; பக்தர்களுக்கு ரூ.5 கோடி குழு காப்பீடு
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பக்தர்களுக்கு மொத்தமாக ரூ.5 கோடியில், கோயில் நிர்வாகம் சார்பில் விபத்து குழு காப்பீடு செய்யப்பட்டுள்ளது.
மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம் செப்.,17 காலை 7:40 மணி முதல் 8:10 மணிக்குள் நடக்கிறது. 17 ஆண்டுகளுக்கு பிறகு நடப்பதால் லட்சக்கணக்கானோர் பங்கேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கோயில் மேல்தளம், பொற்றாமரைக்குளம், ஆயிரங்கால் மண்டபம், ஆடி வீதிகள் என பரவலாக பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். உபயதாரர்களுக்கு 4 ஆயிரம் பாஸ்கள், வி.ஐ.பி.,க்கள், பக்தர்கள் 5 ஆயிரம் பேருக்கு பாஸ்கள் வழங்கப்பட உள்ளது. ஹாலோகிராம் ஸ்டிக்கர், கியூ.ஆர். கோடு வசதியுடன் 7 வண்ணங்களில் பாஸ் வழங்கப்பட உள்ளது. இதற்கிடையே கும்பாபிஷேகத்தன்று பக்தர்கள் பாதுகாப்பு கருதி ரூ.5 கோடிக்கு கோயில் நிர்வாகம் சார்பில் விபத்து குழு காப்பீடு செய்யப்பட்டுள்ளது.