விநாயகர் சிலை வழிபாடு அனுமதி பெற சிறப்பு மையம்
திண்டிவனம்: விநாயகர் சதுர்த்தியையொட்டி, சிலை வைத்து வழிபட அனுமதி பெறுவதற்காக, தாலுகா அலுவலத்தில் சிறப்பு மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
விநாயகர் சதுர்த்தி வழிபாடு வரும், 14ம் தேதி விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, பல்வேறு பகுதிகளில் பிரம்மாண்ட விநாயகர் சிலைகளை வழிபாடு செய்வது வழக்கம்.
விநாயகர் சிலை வைத்து வழிபட, போலீசார் மற்றும் மின்துறை, தீயணைப்புத்துறை ஆகியவற்றில் என்.ஓ.சி.,சான்றிதழ் பெற வேண்டும்.
இதற்கு அனுமதி பெறுவதில் ஏற்படும் கால தாமதத்தை கருத்தில் கொண்டு, திண்டிவனம் தாலுகா அலுவலகத்தில் தனியாக மையம் அமைக்கப்பட்டுள்ளது.
விநாயகர் சிலை வைத்து வழிபடுபவர்கள் கடந்தாண்டு பெற்ற, என்.ஓ.சி.,சான்றிதழை எடுத்து வந்து, மையத்தில்
போலீசாரிடம் கொடுத்தால், அவர்கள் மூலம், மின்துறை, தீயணைப்புத்துறையினரிடம் என்.ஓ.சி.,பெறுவதற்கு ஏற்பாடு செய்யப்படுகிறது.
மூன்று துறையிடம் அனுமதி பெற்ற பிறகு, தாசில்தார் மூலம், சப்–கலெக்டருக்கு பட்டியல் அனுப்பபடும். சப்–கலெக்டர் அனுமதி கொடுத்த பிறகு, பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபடலாம் என்று போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளன.