உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொண்டத்துக்காளியம்மன் கோவிலில் ரூ.18 லட்சம் உண்டியல் வசூல்

கொண்டத்துக்காளியம்மன் கோவிலில் ரூ.18 லட்சம் உண்டியல் வசூல்

பெருமாநல்லுார்: பெருமாநல்லுார், கொண்டத்து காளியம்மன் கோவில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று நடைபெற்றது.

கோவில் அறங்காவலர் மனோகரன், அறங்காவலர் சுந்தரமுத்து, சிவன்மலை கோவில் உதவி ஆணையர் கிருத்திகா, திருப்பூர் வடக்கு ஆய்வாளர் வீரப்பன், செயல் அலுவலர் முருகன் ஆகியோர் முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டது.

இதில், பக்தர்கள் 18 லட்சத்து 32 ஆயிரத்து 56 ரூபாய் ரொக்கம், 88 கிராம் தங்கம், 70 கிராம் வெள்ளி காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.

காணிக்கை எண்ணும் பணியில் திருப்பூர் மகா விஷ்ணு சேவா சங்கத்தினர் மற்றும் பெருமாநல்லுார் கே.எம்.சி., பப்ளிக் பள்ளி மாணவர்கள் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !