அகத்திய மாமுனிவருக்கு ஆயில்யம் அபிஷேகம்
ADDED :1 hours ago
காஞ்சிபுரம்: ஆவணி மாத ஆயில்யம் நட்சத்திரத்தையொட்டி, கிளார் அகத்தீஸ்வரர் கோவிலில் உள்ள அகத்திய மாமுனிவருக்கு, நேற்று சிறப்பு அபிஷேக அலங்காரம் மற்றும் மஹாதீப ஆராதனை நடந்தது.
காஞ்சிபுரம் அடுத்த கிளார் கிராமத்தில், அகத்திய மாமுனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட அறம் வளர் நாயகி சமேத அகத்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.
இக்கோவிலில் அகத்திய மாமுனிவர், உலோபமுத்திரை அம்பிகையுடன் ராஜ அலங்காரத்தில், தனி சன்னிதியில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
அகத்திய முனிவர் அவதரித்த ஆயில்ய நட்சத்திரத்தையொட்டி ஆவணி மாத ஆயில்ய நட்சத்திரமான நேற்று, அகத்தியருக்கும், உலோப முத்திரை அம்பிகைக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் மஹா தீபாராதனை நடந்தது.
இதில், சிவனடியார்கள், பள்ளி, கல்லுாரி மாணவ – மாணவியர், பக்தர்கள், அகத்தியரின் 108 போற்றியை பாராயணம் செய்து வழிபட்டனர்.