உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாரியம்மன் கோவில் திருத்தேர் திருவிழா

மாரியம்மன் கோவில் திருத்தேர் திருவிழா

கச்சிராயபாளையம்: மாத்தூர் ஸ்ரீ மகா முத்து மாரியம்மன் கோவிலில் தேர் திருவிழா நேற்று நடந்தது.

கச்சிராயபாளையம் அடுத்த மாத்தூர் கிராமத்தில் ஸ்ரீ மகா முத்துமாரி அம்மன் திருக்கோவில் உள்ளது. இந்த கோவிலில் தேர் திருவிழா கடந்த 6ம் தேதி உள் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தொடர்ந்து இரவு நேரங்களில் அலங்கார உறுதிகளில் அம்மன் வீதி உலா நடத்தப்பட்டது. அம்மனுக்கு பொதுமக்கள் விளக்கு பூஜை, சாகை வார்த்தல், ஊரணி பொங்கல், பால்குடம், முளைப்பாரி எடுத்தும் மாவிளக்கு பூஜை செய்தும் அம்மனை வழிபட்டனர். நேற்று அம்மனுக்கு அலகு குத்தியும், அக்னி சட்டி எடுத்தும், அங்கபிரதட்சணம் செய்தும் பொதுமக்கள் தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தினர். திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் திருவிழா நேற்று நடந்தது. இதில் பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு தேரினை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !