திருப்பரங்குன்றம்: பறவை காவடியில் பக்தர்கள்
ADDED :1 days ago
திருப்பரங்குன்றம்: உலக தமிழர்கள் நலன் வேண்டி உச்சப்பட்டி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் தமிழர்கள் நேற்று காவடி, பறவைகள் காவடி, பால்குடம், முகத்தில் அலகு குத்தியும், தீச்சட்டி எடுத்தும் வந்தனர்.
திருப்பரங்குன்ற சரவணப் பொய்கையில் இருந்து நேற்று காலை 400க்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்கள் பால்குடங்களுடன் உச்சப்பட்டி முகாம் சென்றனர். அங்கு சித்தி விநாயகர் கோயிலில் மூலவருக்கு பாலாபிஷேகம், பூஜை செய்து நேர்த்திக் கடனை செலுத்தினர்.
பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை நிர்வாகிகள் சிவமூர்த்தி, யோகேஸ்வரன், தங்கவேலு, ஜெனிட், கஜன் செய்தனர். பூஜை ஏற்பாடுகளை கோயில் பூசாரி கிருஷ்ணபிள்ளை செய்தார்.