கரியகாளியம்மன் கோவிலில் 17ம் தேதி கும்பாபிஷேக விழா
திருப்பூர்: காங்கயம், பரஞ்சேர்வழி கரியகாளியம்மன் கோவிலில், மஹா கும்பாபிேஷக விழா, 17ம் தேதி நடக்கிறது. நேற்று விநாயகர் பூஜை விழா துவங்கியது.
காங்கயம் அருகேயுள்ள பரஞ்சேர்வழியில் உள்ள கரியகாளியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோவில் வளாகத்தில் விநாயகர், முருகன், பிராம்மியதி சக்திகள், துர்கையம்மன், பேச்சியம்மன், கன்னிமார், கருப்பராயன், முனிஸ்வரர், ஆறு குல மக்களின் குதிரைகள், பரிகாரமூர்த்திகள் ஆகியன அமைந்துள்ளன.
இந்த சன்னதிகள் மற்றும் கோவிலின் ராஜகோபுரம், கோவில் கோபுரம் மற்றும் மகா மண்டபம் உள்ளிட்டவை திருப்பணி மேற்கொண்டு நிறைவு பெற்றுள்ளது.
இதனை தொடர்ந்து, கும்பாபிேஷகம், 17ம் தேதி நடக்கிறது. விழாவில், பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், சிரவை ஆதினம் ராமானந்த குமரகுருபர அடிகளார், பழநி ஆதினம் சாது சண்முக அடிகளார் பங்கேற்று ஆசியுரை வழங்குகின்றனர்.
கும்பாபிேஷக விழா நேற்று விநாயகர் பூஜையுடன் துவங்கியது. மகா சங்கல்பம் மற்றும் கணபதி யாகம் நடந்தன. தொடர்ந்து முளைப் பாலிகை மற்றும் புனித தீர்த்த குட ஊர்வலம் நடந்தது, மஹா வாஸ்து சாந்தி, அங்குரார்ப்பணம் மற்றும் தீபாராதனை ஆகியன நடந்தது. விழாவில்,இன்று (15ம் தேதி), நவக்கிரக ேஹாமம் மற்றும் யாகசாலைப் பிரவேசம், முதல் மற்றும் இரண்டாம் கால யாக சாலை பூஜைகளும் நடக்கிறது. நாளை மூன்றாம் கால யாகசாலை பூஜை மற்றும் தீபாராதனை நடக்கிறது. 17ம் தேதி, அதிகாலை 4:00 மணிக்கு நான்காம் கால யாக பூஜைகளைத் தொடர்ந்து காலை 7:45 மணிக்கு கோபுரம் மற்றும் மூலவர் சன்னதிகளில் மஹா கும்பாபிேஷகம் நடக்கிறது.
அதன்பின், மஹா அலங்காரம் மற்றும் மஹா தீபாராதனையும் மாலை திருவீதியுலா நிகழ்வும் நடக்கிறது. விழாவை முன்னிட்டு, காலை, 8:00 மணி முதல் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.