முளைப்பாரி, விமான கலச ஊர்வலம்
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே பட்டக்காரன்பாளையத்தில், பழமை வாய்ந்த ஸ்ரீ திம்மராயப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது.
புதிதாக நுழைவாயில், மூலவர் கோபுரம், மூன்று நிலை ராஜகோபுரம் உள்ளிட்ட பல்வேறு திருபணிகள் நிறைவடைந்துள்ளது. இதையடுத்து, நாளை (17ம்) மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
மகா கும்பாபிஷேகத்திற்காக, அரண்மனை வடிவில் யாகசாலையும் அதில், 9 ஹோம குண்டங்கள், மற்றும் பிராதனத்துடன் சேர்த்து 7 வேதிகைகளும் அழகாக அமைக்கப்பட்டுள்ளன. இந்த வேதிகைகளில் ராஜகோபுரம், ஸ்ரீதேவி, பூதேவி சமேத திம்மராயப் பெருமாள், கருடாழ்வார், ஆஞ்சநேயர், சங்கு சக்கரம் உள்ளிட்ட வண்ண வேலைபாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கும்பாபிஷேகம் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நேற்று இரும்பொறை கைலாசநாதர் கோவிலில் இருந்து முளைப்பாரி விமான கலசம் ஊர்வலமாக, இரும்பொறை சொக்கலிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து எடுத்து வரப்பட்டு திம்மராயப் பெருமாள் கோவிலை அடைந்தது.
விழா ஏற்பாடுகளை நிர்வாக குழுவினர், அறங்காவலர்கள் மற்றும் விழா குழுவினர் செய்தனர்.