திருப்புல்லாணி புல்லாணி மாரியம்மன் கோயிலில் முளைப்பாரி விழா
ADDED :18 hours ago
திருப்புல்லாணி, திருப்புல்லாணி கிழக்கு சாலைத் தெருவில் உள்ள புல்லாணி மாரியம்மன் கோயிலில் முளைப்பாரி உற்ஸவம் நடந்தது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது நாள்தோறும் கும்மியாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்டவைகள் நடந்தது. நேற்று முன்தினம் மாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. நேற்று மாலை 4:00 மணிக்கு அம்மன் சக்தி கரகம் முன்னே செல்ல பாரி சுமந்து ஏராளமான பெண்கள் ஊர்வலமாக சென்றனர். பாரி கங்கை சேர்க்கப்பட்டது. ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.