கிணத்துக்கடவு பாலகொண்டராயிடு பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :19 hours ago
கிணத்துக்கடவு: குருநல்லிபாளையம், ஸ்ரீதேவி பூதேவி சமேத பாலகொண்டராயிடு பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
கிணத்துக்கடவு, குருநல்லிபாளையம் ஸ்ரீதேவி பூதேவி சமேத பாலகொண்டராயிடு பெருமாள் கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சி கடந்த, 2ம் தேதியன்று, காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் ஆரம்பம் ஆனது. 15ம் தேதி, தீர்த்த குடம் எடுத்தல், மங்கள இசையுடன் சுவாமி திருவீதி உலா, முதற்கால வேள்வி, மகா தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. 16ம் தேதி, இரண்டாம் கால வேள்வி, பீட சக்தி பூஜை, நாடி சந்தானம், கலசம் புறப்பாடு, பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதில், பக்தர்கள் பலர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து தீபாராதனை, தீர்த்தம் கொடுத்தல், மகா அபிஷேகம் அலங்காரம் நடந்தது.