உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாதூர் ப்ரசன்ன வெங்கடேச பெருமாள் அனுமந்த வாகனத்தில் வீதியுலா

பாதூர் ப்ரசன்ன வெங்கடேச பெருமாள் அனுமந்த வாகனத்தில் வீதியுலா

உளுந்தூர்பேட்டை: பாதூர் ஸ்ரீ ப்ரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா வையொட்டி அனுமந்த வாகனத்தில் சுவாமி வீதியுலா நடந்தது.


உளுந்தூர்பேட்டை தாலுகா பாதூர் ஸ்ரீ ப்ரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா கடந்த 13ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. அன்று இரவு திருப்பல்லக்கிலும், விசேஷத் திருமஞ்சனம், ததியாராதனமும் நடந்தது. 14ம் தேதி இரவு சுவாமி சந்திர பிரபை வாகனத்தில் சுவாமி வீதியுலா நடந்தது. நேற்று முன்தினம் இரவு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அனுமந்த வாகனத்தில் சுவாமி வீதியுலா நடந்தது. நேற்று சேஷ வாகனத்தில் சுவாமி வீதியுலா வந்தது. இன்று(17ம் தேதி) காலை 11 மணியளவில் திருப்பல்லக்கில் பெருமாள் நாச்சியார் திருக்கோலச் சேவையும், விசேஷத் திருமஞ்சனமும். ததியாராதனமும் நடக்கிறது. இரவு சுவாமி தங்க கருட வாகனத்தில் வீதியுலா நடக்கிறது. வரும் 24ம் தேதி வரை நடக்கும் பிரம்மோற்சவ விழா தினசரி சுவாமி வீதியுலா நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !