இலுப்பைக்குடி சுயம்பிரகாசேஸ்வர் கோயிலில் கும்பாபிஷேகம்
காரைக்குடி; இலுப்பைக்குடி சுயம்பிரகாசேஸ்வர் சவுந்திரநாயகி அம்மன் கோயிலில் ராஜ கோபுரத்திற்க்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.
காரைக்குடி அருகே உள்ள இலுப்பைக்குடி நகரக் கோயிலான ஸ்ரீ சௌந்தரநாயகி அம்பாள் சமேத ஸ்ரீ சுயம்பிரகாசேஸ்வரர், வைரமூர்த்தி ஆலய கும்பாபிஷேக விழா செப்.10 ம் தேதி மங்கல இசை ,விநாயகர் பூஜையுடன் நிகழ்ச்சி தொடங்கியது. செப்.11ம் தேதி கோ பூஜை, கணபதி ஹோமம் நடந்தது. செப்.14 முதல் கால பூஜை, செப்.14 காலை இரண்டாம் கால பூஜை, மாலை மூன்றாம் கால பூஜை நடந்தது. செப்.16 காலை நான்காம் கால பூஜை, மாலையில் ஐந்தாம் கால பூஜை நடந்தது. தொடர்ந்து இன்று காலை 10:00 மணிக்கு மூலஸ்தானத்தில் உள்ள பரிவார மற்றும் உற்சவர் தெய்வங்களுக்கு கும்பாபிஷேகமும், காலை 10:30 மணிக்கு விமான கும்பாபிஷேகமும் 10:40 மணிக்கு மேல் 11:00 மணிக்குள் மூலாலய கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மகா அபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். மாலை 5:00 மணிக்கு சீர்வரிசை எடுத்தலும், இரவு 7:00 மணிக்கு திருக்கல்யாணமும், 8:00 மணிக்கு பஞ்சமூர்த்தி திருவீதி உலா நடைபெறுகிறது. நாளை மண்டல அபிஷேகம் தொடங்குகிறது.