உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செப்பறை அழகிய கூத்தர் கோயிலில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்

செப்பறை அழகிய கூத்தர் கோயிலில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்

நெல்லை : உலகின் முதல் நடராஜர் திருமேனி அமையப்பெற்ற நெல்லை மாவட்டம் ராஜவல்லிபுரம் செப்பறை அழகிய கூத்தர் கோயிலில் இன்று மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.


நெல்லை, ராஜவல்லிபுரத்தில் அமைந்துள்ள செப்பறை அழகியகூத்தர் கோயிலில் கும்பாபிஷேக விழா, விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து கோவில் வளாகத்தில் சிறப்பு பூஜைகள் மற்றும் யாகசாலை நிகழ்ச்சி துவங்கி சிறப்பாக நடைபெற்று வந்தது. தொடர்ந்து இன்று காலை 9 மணிக்கு ஆறாம் கால யாகசாலை பூஜை நிறைவடைந்து கடம் புறப்பாடு நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து அதிகாலையில் பரிவார சன்னதிகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அடுத்து விமானம் மற்றும் மூலவருக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.  இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !