காங்கயம் பரஞ்சேர்வழி கரியகாளியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்
திருப்பூர்; திருப்பூர் மாவட்டம் காங்கயம் பரஞ்சேர்வழி கரிய காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடைபெற்றது.
காங்கயம் அருகேயுள்ள பரஞ்சேர்வழியில் உள்ள கரியகாளியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோவில் வளாகத்தில் விநாயகர், முருகன், பிராம்மியதி சக்திகள், துர்கையம்மன், பேச்சியம்மன், கன்னிமார், கருப்பராயன், முனிஸ்வரனர், ஆறு குல மக்களின் குதிரைகள், பரிகாரமூர்த்திகள் ஆகியன அமைந்துள்ளன. இந்த சன்னதிகள் மற்றும் கோவிலின் ராஜகோபுரம், கோவில் கோபுரம் மற்றும் மகா மண்டபம் உள்ளிட்டவை திருப்பணி மேற்கொண்டு நிறைவு பெற்றதை தொடர்ந்து, கும்பாபிஷேகம் இன்று 17ம் தேதி நடைபெற்றது. விழாவில், பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், சிரவை ஆதினம் ராமானந்த குமரகுருபர அடிகளார், பழநி ஆதினம் சாது சண்முக அடிகளார் பங்கேற்று ஆசியுரை வழங்கினர். விழாடைவ முன்னிட்டு, காலை, 8:00 மணி முதல் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.