உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரமடை அரங்கநாதர் கோவிலில் புரட்டாசி சனி விழா 19ம் தேதி துவக்கம்

காரமடை அரங்கநாதர் கோவிலில் புரட்டாசி சனி விழா 19ம் தேதி துவக்கம்

மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில், புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை விழா, வருகிற, 19ம் தேதி துவங்க உள்ளது.


கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ ஸ்தலம் காரமடை அரங்கநாதர் கோவில். இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி சனிக்கிழமை விழாவும், நவராத்திரி விழாவும் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு புரட்டாசி முதல் சனிக்கிழமை விழா, வருகிற, 19ம் தேதி துவங்க உள்ளது. 26ம் தேதி இரண்டாவது சனிக்கிழமை விழாவும், அக்., 3ம் தேதி மூன்றாவது சனிக்கிழமை விழாவும் நடைபெற உள்ளது. 10ம் தேதி நான்காம் சனிக்கிழமை விழாவும், மஹாளய அமாவாசை விழாவும் நடைபெற உள்ளது. அக்.,12ம் தேதி நவராத்திரி உற்சவம் விழா துவங்க உள்ளது. 17ம் தேதி ஐந்தாவது சனிக்கிழமை விழா நடைபெற உள்ளது. அக்.,20ம் தேதி சரஸ்வதி பூஜையும், 21ம் தேதி விஜயதசமியும், குதிரை வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி, அம்பு போடும் விழாவும் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர், பணியாளர்கள் ஆகியோர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !