உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சக்தி விநாயகர் கோவில் 11ம் ஆண்டு விழா

சக்தி விநாயகர் கோவில் 11ம் ஆண்டு விழா

பல்லடம்: பல்லடம் அருகே மகாலட்சுமி நகர், ஆதிநாராயண நகரில் உள்ள ஸ்ரீசக்தி விநாயகர் கோவிலின் 11-ம் ஆண்டு விழா, நடைபெற்றது.

விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமத்துடன் நிகழ்ச்சிகள் தொடங்கின. தொடர்ந்து, மூலவர் ஸ்ரீசக்தி விநாயகருக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீசக்தி விநாயகர் பக்தர் களுக்கு அருள்பாலித்தார். ஊர் பொதுமக்கள் சார்பில் நடைபெற்ற ஆண்டு விழாவில், பொதுமக்கள் பலரும் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !