உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆற்பாக்கம் பெருமாள் கோவிலில் கொடிமரம் பிரதிஷ்டை

ஆற்பாக்கம் பெருமாள் கோவிலில் கொடிமரம் பிரதிஷ்டை

ஆற்பாக்கம்: காஞ்சிபுரத்தை அடுத்த ஆற்பாக்கம் ஆதிகேசவப் பெருமாள் கோவிலில், புதிய கொடிமரம் நேற்று பிரதிஷ்டை செய்யப்பட்டது.

ஹிந்து சமய அறநிலையத்துறை மற்றும் திருவாலீஸ்வரர் அறக்கட்டளை இணைந்து இக்கோவிலில் பல்வேறு திருப்பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

திருப்பணிகளின் ஒரு பகுதியாக, புதிய கொடிமரம், நேற்று காலை வேத மந்திரங்கள் முழங்க, சிவாச்சாரியார்கள் மற்றும் ஸ்தபதிகள் முன்னிலையில் நிறுவப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் அறக்கட்டளை நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

இதுகுறித்து அறக்கட்டளை நிர்வாகிகள் கூறியதாவது:

கோவிலின் திருப் பணிகள் அனைத்தும் விரைந்து நடைபெற்று வருகின்றன. பணிகள் முழுமையாக நிறைவடைந்ததும், வரும் ஜனவரி மாதம் கும்பாபிஷேகம் நடைபெறும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !