மஹா பெரியவா அனுஷ பூஜை பக்தர்கள் கூட்டுப்பிரார்த்தனை
உடுமலை: உடுமலை ஜி.டி.வி., லே–அவுட்டில் உள்ள செல்வ விநாயகர் கோவில் வளாகத்தில், ஒவ்வொரு மாதமும் காஞ்சி மஹா பெரியவாளின் அனுஷ நட்சத்திரத்தை முன்னிட்டு அனுஷ பூஜை நடைபெற்று வருகிறது.
ஆவணி மாத அனுஷ நட்சத்திர காஞ்சி மஹா பெரியவா அனுஷ பூஜை நேற்று நடந்தது. விக்னேச்வர பிரார்த்தனையுடன் ஆரம்பித்து ஸங்கல்பம், பீட பூஜை, அனுஷ பிரதான பூஜை, சித்திர பட ஆவாஹனம், குருத்யானம்,வேதபாராயணம், காஞ்சி மஹா பெரியவர் அஷ்டோத்திர அர்ச்சனை, தூப, தீப நைவேத்யம், மந்திர புஷ்பம், சதுர்வேத பாராயணம், கற்பூர ஹாரத்தி காட்டப்பட்டது.
மேலும், காஞ்சி மட ஸ்வஸ்தி வசனம், தோடகாஷ்டகம், விநாயகர் அகவல், சிவபுராணம், திருத்தொண்டர் தொகை, கோளறு திருப்பதிகம், பஞ்சபுராணம், திருப்புகழ் உள்ளிட்ட பாராயணங்கள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் உலக அமைதிக்கும், சமாதானத்திற்கும், ஒற்றுமைக்கும், ஆரோக்கியத்திற்கும் கூட்டுப்பிரார்த்தனை செய்யப்பட்டது.
அனுஷ பூஜை ஏற்பாடுகளை செல்வ விநாயகர் கோவில் நிர்வாகம் செய்திருந்தது.