உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மண்டல பூஜை: குவியும் பக்தர்கள்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மண்டல பூஜை: குவியும் பக்தர்கள்

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் செப்., 17ம் தேதி நடந்ததை முன்னிட்டு செப்., 20 வரை இலவச தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.


மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், 17 ஆண்டுகளுக்கு பின், மகா கும்பாபிஷேகம் நேற்று கோலாகலமாக நடந்தது. இதில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகத்திற்கு பிறகு 48 நாட்களுக்கு(நவ.,3 வரை) மண்டல பூஜை நடக்கும். ஆனால் மீனாட்சி அம்மன் கோயிலில் நேற்று (செப்.,18) துவங்கி அக்.,2 வரை மட்டுமே நடக்கிறது. மாதந்தோறும் திருவிழா இருப்பதால் அடுத்த மாத திருவிழாவை கணக்கிட்டு மண்டல பூஜை நடத்தப்படுவது இக்கோயில் வழக்கம். அதன்படி அடுத்த மாதம் 11ம் தேதி நவராத்திரி உற்ஸவம் துவங்குவதை முன்னிட்டு அதற்குள்ளாகவே மண்டல பூஜை நடத்தப்படுகிறது. அதன்படி நேற்று மண்டல பூஜை துவங்கியது. இன்று மண்டல பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். செப்., 20 வரை இலவச தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டுவருகின்றனர். இன்று அதிகாலை முதல் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நீண்ட வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்காக கோயில் நிர்வாகம் சார்பில் பிஸ்கட், தண்ணீர் பாட்டில் வழங்கப்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !