இந்திலி பாலமுருகன் கோவிலில் சத்ரு சம்ஹார திரிசதி வழிபாடு
ADDED :2 hours ago
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி பாலமுருகன் கோவிலில் சத்ரு சம்ஹார திரிசதி வழிபாடு நடந்தது. அதனையொட்டி, இன்று காலை 10:30 மணிக்கு சுவாமிக்கு மகாபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தது. தொடர்ந்து தீபாராதனையும், சத்ரு சம்ஹார திரிசதி சிறப்பு வழிபாடும் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.