மேல்மலையனுாருக்கு பாதயாத்திரை
ADDED :2 hours ago
விழுப்புரம்: பரையர் பூசாரிகள் சனாதன தர்ம இயக்கம் சார்பில் மேல்மலையனுாருக்கு மூன்று நாட்கள் பாதயாத்திரை துவக்க நிகழ்ச்சி நடந்தது.விழுப்புரம் அடுத்த சிறுவாக்கூர் ஆஞ்சநேயர் கோவிலில் நடந்த நிகழ்ச்சிக்கு, மேல்மலையனுார் அங்காளம்மன் சேவா சமிதி அறக்கட்டளை நந்தகுமார் தலைமை தாங்கினார். கணபதி முன்னிலை வகித்தார். ராமமூர்த்தி வரவேற்றார். ஆன்மீக சேவகர் ஈஸ்வர் ராஜலிங்கம், ஆடிட்டர் தனசேகர் பாதயாத்திரையை துவக்கி வைத்தனர். இக்குழுவினர் கக்கனுார், அத்தியூர் திருக்கை, அனுமந்தபுரம், செஞ்சி வழியாக மேல்மலையனுாருக்கு செல்கின்றனர்.