உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாவம் தீர வழி சொல்கிறார் ராமானுஜர்

பாவம் தீர வழி சொல்கிறார் ராமானுஜர்

* கடவுளின் திருவடியை பற்றிக்கொள். உன் பாவம் தீரும்.  
* பிரகாரத்தை மெதுவாக வலம் வந்து சுவாமியை வணங்கு.   
* பலனை எதிர்பார்த்து பிறருக்கு உதவி செய்யாதே.
* கோயிலின் கோபுரத்தை பார்த்தவுடன் கைகூப்பி வணங்கு.
* கண், காது, மூக்கு, வாய், மெய் ஆகிய ஐம்புலன்களை அடக்கு.
* பிறரை குறை கூறுபவரிடம் பழகினால் அந்த குணம் உனக்கும் வரும்.  
* நல்ல எண்ணம் ஒன்றே நல்ல வாழ்க்கையை கொடுக்கும்.
* சுவாமி சிலைகள் கல், சுதை, ஐம்பொன் என நினைக்காதே. மீறினால் கடவுள் தெரிய மாட்டார்.
* ஆழ்வார்கள் அருளிய திவ்ய பிரபந்தங்களை படித்தால் புண்ணியம் சேரும்.
* பிறருக்கு நல்லதை செய்தால் நன்மை தானாகவே தேடி வரும்.  
* உன்னால் முடிந்த உதவியைக் கோயில்களுக்கு செய்.
* ‘ஓம் நமோ நாராயணாய’ என்ற மந்திரத்தை தினமும் சொல்.  
* கடவுளை வணங்குவதை போல் அடியார்களையும் வணங்கு.
* பெருமாள்தான் ‘பரம்பொருள்’ என்பதை அறிந்து பக்தி செலுத்து.
* கோயிலில் கொடுக்கும் பிரசாதத்தை வேண்டாம் எனச் சொல்லாதே.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !