காஞ்சிபுரம் வேதாந்த தேசிகர் வார்சிக மகோத்சவம் நிறைவு; சுவாமி வீதியுலா
ADDED :1 hours ago
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் விளக்கொளி பெருமாள் கோவில் அருகில், துாப்புல் வேதாந்த தேசிகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் வேதாந்த தேசிகர் வார்சிக மகோத்சவம் சிறப்பாக நடைபெற்று வந்தது. மகோத்சவத்தின் நிறைவு நாளான நேற்று ஸ்ரீதேவி, பூதேவியருடன் விளக்கொளி பெருமாள் என அழைக்கப்படும் தீபப்பிரகாசர் விமானத்தில் எழுந்தருளி சுவாமி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.