உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் /  விழுப்புரம் பசுபதீஸ்வரர் கோவிலில் குருவார பிரதோஷ வழிபாடு

 விழுப்புரம் பசுபதீஸ்வரர் கோவிலில் குருவார பிரதோஷ வழிபாடு

விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த பஞ்சமாதேவியில் பசுபதீஸ்வரர் கோவிலில், நேற்று குருவார பிரதோஷ வழிபாடு நடந்தது. மாலை 4:00 மணிக்கு மூலவர் பசுபதீஸ்வரர், நந்திகேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மூலவர், நந்திகேஸ்வரருக்கு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். அதேபோல, விழுப்புரம் மகாராஜபுரம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், பிரதோஷ வழிபாடு நடந்தது. மூலவர் பசுபதீஸ்வரர் சிறப்பு மலர் அலங்காரத்தில் அருள் பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !