பீளமேடு அஷ்டாம்ச ஸ்ரீ வரத ஆஞ்சநேயர் கோவிலில் அனுமனுக்கு அபிஷேகம்
ADDED :2 days ago
கோவை: புரட்டாசி மாதம் சதயம் நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை பீளமேடு அஷ்டாம்ச ஸ்ரீ வரத ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அனுமனுக்கு சிறப்பு அபிஷேகம் பூஜைகள் நடந்தது. இதில் தங்க காப்பு கவசத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அனுமனை வழிபட்டனர். நிறைவாக பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.