கோயில்களில் பவுர்ணமி வழிபாடு
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் பவுர்ணமி சிறப்பு வழிபாடுகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
புரட்டாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயில், கோட்டை மாரியம்மன் கோயில், பத்ரகாளியம்மன் கோயில், பழநி ரோடு காளியம்மன் கோயில், ஆர்.எம்.,காலனி வெட்காளியம்மன் உட்பட பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது.
கன்னிவாடி சோமலிங்க சுவாமி கோயிலில் பால், இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம் உட்பட திரவிய அபிஷேகம் நடந்தது. ஓம்கார விநாயகர், ஓம்கார நந்தி, வாலை சக்தி அம்மன், போகர், முத்தானந்தர், வாலையானந்தர், குண்டலினி சித்தர்களுக்கு விசேஷ மலர் அலங்காரத்துடன் மகா தீபாராதனை நடந்தது. தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் கோயில், கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயில், காரமடை ராமலிங்க சுவாமி கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது.
குட்டம் கருமலை அடிவாரம் ஆதி கோரக்கநாதர் மவுனகுரு சித்தர் பத்மகிரி பாபா சமஸ்தானத்தில் சிறப்பு யாகம் நடந்தது. விநாயகர், கருப்பணசாமி, கன்னிமார் உட்பட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
நத்தம் அருகே குட்டூர் உண்ணாமுலை அம்மன் கோயிலில் அம்மனுக்கும், அண்ணாமலையாருக்கும் 16 வகையான அபிஷேகம், சிறப்பு அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது. விளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர்.
நத்தம் மாரியம்மன், கம்பிளியம்பட்டி வரசித்தி வாராஹி அம்மன், ராக்காயி அம்மன், மதுரகாளியம்மன், பகவதிஅம்மன், காளியம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது.
அக்கரைப்பட்டி சடையாண்டி கோயில், குட்டத்துப்பட்டி பிச்சை சித்தர் கோயில் உட்பட மாவட்டத்தில் உள்ள கோயில்களில் நடந்த பவுர்ணமி சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே கீழக்காஞ்சிரங்குளம் கிராமத்தில் மகாதேவர் கோயிலில் புரட்டாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு விளக்கு பூஜை நடந்தது. மகாதேவருக்கு பால், சந்தனம், மஞ்சள் உட்பட பொருட்களால் அபிஷேகம் செய்து அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. 108 விளக்கு பூஜை நடந்தது. இதே போன்று முதுகுளத்துார் செல்லி அம்மனுக்கு மஞ்சள், பால், திரவிய பொடி உட்பட பொருட்களால் அபிஷேகம் நடந்தது.
முதுகுளத்துார் திரிபுரசுந்தரி பத்ரகாளியம்மன் சிறப்பு பூஜை நடந்தது. முதுகுளத்துார் அருகே சித்திரங்குடியில் சீலைக்காரி அம்மன் கோயிலில் பவுர்ணமி பூஜை நடந்தது. சீலைக்காரி அம்மனுக்கு பால், சந்தனம், மஞ்சள் உட்பட பொருட்களால் அபிஷேகம் தீபாராதனை நடந்தது.அன்னதானம் வழங்கப்பட்டது.
*திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் உள்ள சிநேகவல்லி அம்மன் சன்னதி, திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயிலில் பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன.
சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க நடந்த தீபாராதனையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.