உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மும்பையில் சதுர்த்தி விழா நிறைவு; லால்பாக்ராஜா ராஜாவிற்காக திரண்ட லட்சக்கணக்கான பக்தர்கள்

மும்பையில் சதுர்த்தி விழா நிறைவு; லால்பாக்ராஜா ராஜாவிற்காக திரண்ட லட்சக்கணக்கான பக்தர்கள்

மும்பை; மும்பையில் விநாயகர் சதுர்த்தி விழா நிறைவு நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு லால்பாக்ராஜா ராஜாவிற்கு விடைகொடுத்தனர். 


மும்பையில், லால்பாக் மார்க்கெட் பகுதி யில் உள்ள, ’லால்பாக் ராஜா’ விநாயகர் கோவில், பிரசித்தி பெற்றது. இங்கு, விநாயகர் சதுர்த்தி விழா, 11 நாட்கள் கொண்டாடப்படும். கோவில் வளாகத்தில் நிறுவப்படும் விநாயகர் சிலையை தரிசிக்கும் லட்சக்கணக்கான பக்தர்கள், பணம், தங்கம், வெள்ளியை காணிக்கையாக அளிப்பர். இந்தாண்டு சுமார் 20 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.


விநாயகர் சதுர்த்தி ; மும்பையில் கடந்த 14ம்தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் தொடங்கியது. கடந்த 11 நாட்களாக மும்பை நகரம் பக்தியுடன் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் விழாக்கோலம் கொண்டிருந்தது.இந்த கொண்டாட்டம் கடந்து வெள்ளிக்கிழமை அனந்த சதுர்த்தசியுடன் நிறைவடைந்தது. மும்பையில் உள்ள பிரசித்தி பெற்ற லால்பாக்சா ராஜா உள்ளிட்ட பிரபலமான மண்டல் சிலைகள் கரைக்கப்பட்டன. 


லால்பாக்ராஜா விநாயகர் சிலை ஊர்வலம் வெள்ளிக்கிழமை மதியம் தொடங்கியது. கணபதி பாபா மோரியா முழக்கத்துடன்  லட்சக்கணக்கான  பக்தர்கள் ஊர்வலத்தில் அணிவகுத்து சென்றனர். இந்த சிலை சின்ச்போக்லி, பைகுல்லா, டு டேங்க்ஸ், பிரார்தனா சமாஜ் வழியாக கிர்காவ் கடற்கரைக்கு கொண்டு செல்லப்பட்டது.  பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்து சென்ற லால்பாக் ராஜா விநாயகர்  நேற்று கடலில் கரைக்கப்பட்டார். பிரம்மாண்டமான விநாயகர் விசர்ஜன ஊர்வலத்தில், லால்பாக்ராஜா ராஜாவிற்கு சுமார் 5 லட்சம் பக்தர்கள் திரண்டு விடை கொடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !