இறைவனின் புகழை பேசினால் ஆனந்தம் பிறக்கும்
ADDED :2 days ago
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் சிறுமுகை சாலை பழைய சந்தை கடை பிள்ளையார் கோவில் வீதியில், தையல்நாயகி தாயார் உடனமர் வைத்தியநாதர் ஆலயமும், 63 நாயன்மார்கள் மற்றும் அம்மையப்பர் மடமும் உள்ளது. இந்த மடத்தில் திருவாசக விளக்கவுரை வகுப்பு நடந்தது.
திருவாசக விளக்கவுரை ஆசிரியர் மோகன்ராஜ், பேசுகையில்,‘‘கடவுளை பற்றி பேசும் போது, அறிவில் ஆனந்தம் பிறக்கிறது. ஆனால் பலவற்றை பேசினால் பிரச்னை தான் வரும். காலையில் இருந்து இரவு வரை பலவற்றை நாம் பேசுகிறோம். ஆனால் அது நமக்கு மகிழ்ச்சியை அளிப்பது இல்லை.
துன்பத்தை தேடி, தேடி நாம் பேசிக்கொண்டு இருக்கிறோம். ஆனால் இறைவனின் புகழை பேசும் போது, ஆனந்தம் பிறக்கும். எனவே மனதுக்கு மகிழ்ச்சியை தரும் இறைவனின் புகழை பேச வேண்டும்,’’ என்றார்.
வகுப்பில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். முடிவில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப் பட்டது.